அன்புள்ள ”நெத்தியடி முஹம்மத்”
உங்களுக்கு புரியவில்லை என்றாலும் சொல்கிறேன். இறைவன் உலகத்துக்கு ஒரு இறைதூதர் என்று யாரையாவது அனுப்பினால், இப்படி கூமுட்டைத்தனமாக எந்த வித அத்தாட்சியும் இல்லாமல், வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்து அனுப்புவானா என்று யோசித்து பாருங்கள்.
”ஏன் இவர் நபி” என்று கேட்டால்,
“நான் இங்கே பேசலை! என் வாய் வழியா அல்லா பேசறார். அவர் சொல்றார்.. முகம்மதுதான் நபி” என்று கவிதை பாடுகிறார் என்று சொல்கிறீர்கள்.
இதனை விட என்ன ஆதாரம் வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
உங்களுக்கே கூமுட்டைத்தனமாக தெரியவில்லை?
திரும்பச் சொல்கிறேன். இது மாதிரி அஸ்கரோ, அல்லது செங்கொடியோ சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? செங்கொடியின் நண்பர் ஒருவர் செங்கொடியை புகழ்ந்து பாடுகிறார். இவருடன் நன்றாக பழகினேன். இவர் உத்தமர். சொன்ன சொல் மாறாதவர். இவர் சொல்வதெல்லாம் உண்மை. இவர்தான் அடுத்த நபி என்று சொல்கிறார்.
நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?
அதே மாதிரிதான் முகம்மதுவையும் நபி என்றோ இறைதூதர் என்றோ ஒத்துக்கொள்ள முடியாது.
எல்லாம் வல்ல இறைவனுக்கு இப்படி இறைதூதர்களை அனுப்ப வேண்டிய கட்டாயம் என்ன? அவரால் முடியாதா?
சரி, இந்த உலகம் ஒரு பரிட்சை என்று சொல்கிறீர்கள். அதற்கு சிலபஸை இறைதூதர் மூலமாக அனுப்புகிறார் என்று சொல்கிறீர்கள்.
இதில் எத்தனை குளறுபடிகள் இருக்கின்றன என்று பாருங்கள். உலகம் ஒரு பரிட்சை என்றால், முதலில் சிலபஸில் எந்த விதமான குழப்பமும் இருக்கக்கூடாது. இருபத்தைந்து ஆசிரியர்கள் இருபத்தைந்து பாடங்களை சொல்கிறார்கள்.நானே சரியான ஆசிரியர் அவரை நம்பாதே என்று எல்லோரும் சொல்கிறார்கள். நீங்கள் எதனை பின்பற்றுவீர்கள்? தப்பான ஆசிரியரை தேர்ந்தெடுத்தால் பரிட்சையில் பெயில்! மோஸஸ், இயேசு, ஜான் பாப்டிஸ்டு, முகம்மது, குலாம் அகமது, பஹாவுல்லா, மெய்வழிச்சாலை ஆண்டவர் என்று எத்தனை பேர்! நீங்கள் யாரை தேர்தெடுத்தீர்கள்? ஒருவர் எந்த குடும்பத்தில் பிறந்தீர்களோ அதனைத்தானே 90 சதவீதம் தேர்ந்தெடுக்கிறார்கள்?
ஆகவேதான் சொல்கிறேன். இறைதூதர் என்று ஒரு ஆளை இறைவன் அனுப்பியிருந்தால், அதில் எந்த விதமான சிக்கலும் இருக்காது. இதுதான் சிலபஸ் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஒரு பச்சைக்குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கும். இறைவன் அப்படிப்பட்ட மோசக்காரராக நிச்சயம் இருக்கமுடியாது. அப்படி சிலபஸ் தெளிவாக இல்லையென்றால், எவனையும் இறைதூதர் என்று அனுப்பவில்லை என்றுதான் பொருள்.
இறைவனை நம்புபவர்கள் வைக்கும் குணாம்சங்களை பாருங்கள்
இறைவன் நியாயமானவர்
இறைவன் பாரபட்சமில்லாதவர்
இறைவன் கருணை மிக்கவர்
இறைவன் அன்பு மிக்கவர்
அப்படிப்பட்ட இறைவன் இருபத்தைந்து போலி இறைதூதர்கள் ஆளாளுக்கு நானே இறைதூதர் என்று கோருவதை பார்த்து சும்மா இருப்பாரா? குலாம் அகமதுவின் மதம் போலி என்றூ சொல்கிறீர்கள். அது எவ்வளவு வேகமாக வளர்ந்துள்ளது என்பதை படித்துப் பாருங்கள். பஹாவுல்லாவின் மதம் பஹாய் இன்று உலகளாவிய மதம். அதற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவரைக்கும். டெல்லியிலிருந்து அடிஸ் அபாபா வரைக்கும் பின்பற்றுபவர்களும், கோவில்களும் இருக்கின்றன. அவர்களுக்கும் முகம்மதுவின் மதத்துக்கும் என்ன வித்தியாசம்? பஹவுல்லாவுக்கும் குலாம் முகமதுவுக்கும் சீடர்கள் முகம்மதுவின் இஸ்லாமிலிருந்துதான் கிடைத்துள்ளார்கள்.
சிந்தித்து பாருங்கள். ஏன் இத்தனை சிலபஸ்? இத்தனை போலி இறைதூதர்கள் மக்களை இதுதான் சிலபஸ் என்று ஏமாற்றுவதை பார்த்துக்கொண்டு பரிட்சை வைக்கும் இறைவன் எப்படி நியாயமானவர் என்று சொல்ல முடியும்?
சிலபஸில் எந்த வித குழப்பமும் இருக்கக்கூடாது அய்யா.
இருபத்தைந்து ஆசிரியர்கள் ஒரே வகுப்பு மாணக்கர்களிடம் ஆளாளுக்கு ஒரு சிலபஸ் என்று கொடுக்கிறார்கள். யாரோ ஒரு ஆசிரியர்தான் சரியான சிலபஸ் கொடுக்கிறார். அதிலிருந்துதான் கேள்வி வரும் என்று சொல்கிறீர்கள். (இதனை அனுமதிக்கும் பிரின்ஸிபால் சரியான கேனையனாக தெரியவில்லை? )
இது என்ன பரிட்சையா?
ரொம்ப சிம்பிள் இது.
இந்த இறைதூதர்கள் இப்படித்தான் ஏமாற்றுகிறார்கள். நான் தான் ஒரிஜினல் சிலபஸ் வைத்திருக்கிறேன். என்னை நம்புபவர்கள்தான் பாஸ் ஆவார்கள் என்று ஏமாற்றுகிறார்கள்.
ஏமாற்றுக்காரர்களை கண்டுகொள்ளுங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக